ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
ஒளிப்பதிவாளராக இருந்து நடிகரானவர் அருள்தாஸ். நீர்பறவை, சூது கவ்வும், சத்ரியன், நான் மகான் அல்ல, கதகளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ரஜினி நடிக்கும் காலா படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் தாதா ரஜினியின் அடியாளாக நடித்து வருகிறார்.
காலா படப்பிடிப்பு தற்போது பூந்தமல்லியை அடுத்துள்ள ஈவிபி பொழுது போக்கு பூங்காவில் போடப்பட்டுள்ள தாராவி செட்டில் நடந்து வருகிறது. நேற்று ரஜினியை தாக்க வரும் வில்லன்களோடு மோதி விரட்டி அடிக்கும் ஆக்ஷ்ன் காட்சி படமாக்கப்பட்டது. இதில் ரஜினி, சமுத்திரகனி, அருள்தாஸ் இணைந்து நடித்தார்கள். வேகமாக வரும் ஜீப்பின் மீது அருள்தாஸ் தாவி குதித்து டிரைவரை தாக்குவது மாதிரியான காட்சி படமானது.
அப்போது டைமிங் மிஸ்சானதால் அருள்தாஸ் தவறி கீழே விழுந்தார். இதில் அவரின் கால் மீது ஜீப் ஏறியது. இதில் அவரது கால் விரல்கள் நசுங்கியது. உனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு விரல் எலும்பு முறிவு கண்டுபிடிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் நேற்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இன்று தொடர்ந்து படப்பிடிப்புகள் நடக்கிறது.