தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித் நடித்துள்ள 'விவேகம்' படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 3000 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷ்ராஹாசன் அறிமுகமாகியுள்ளார். அக்ஷ்ரா தமிழில் நடிக்கும் முதல் படம் இது.
தனது மகள்களின் மேல் அதிக அன்பு கொண்டுள்ள கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் ஏற்கெனவே தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவருடைய இளையமகள் அக்ஷ்ராவும் தமிழில் நடிக்க வந்துள்ளதால் கமல்ஹாசனின் வாரிசுகள் இருவரும் தமிழ் நடிகைகள் ஆகிவிட்டார்கள்.
'விவேகம்' படத்தைத் தற்போது மகள் அக்ஷராவுடன் பார்த்து வருகிறேன். எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,” என கமல்ஹாசன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.