ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித் நடித்துள்ள விவேகம் படம் 24-ம் தேதி வியாழன் அன்று ரிலீஸாக உள்ள நிலையில் அவரது ரசிகர்களை அதை கொண்டாட தயாராகிவிட்டனர். விவேகம் ரிலீஸாகும் தியேட்டர்களில் அலங்காரம், தோரணம், கட்-அவுட், பேனர் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வட சென்னையை சேர்ந்த ரசிகர்கள், அஜித்திற்கு இட்லியில் அவரது உருவத்தை பதித்து அசத்தியுள்ளனர்.
சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் வடசென்னை அஜித் ரசிகர்கள் இணைந்து இந்த இட்லியை தயார் செய்துள்ளனர். அஜித்திற்கு இது 57-வது படம் என்பதால் 57 கிலோ எடையில் அஜித் உருவம் கொண்ட பிரமாண்டமான இட்லி உருவாகி உள்ளது. இந்த இட்லி சென்னையில் உள்ள பாரத் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன்முறையாக இட்லியில் ஒரு நடிகரின் உருவம் பதிவு செய்வது இது தான் முதல்முறை.