தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள திரையுலகில் வித்தியாசமான தைரியமான வேடங்களில் நடிக்க வேண்டுமென்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பவர் ஸ்வேதா மேனன் தான். ரதி நிர்வேதம் ஆகட்டும் இல்லை கர்ப்பிணியாக தனது நிஜ பிரசவத்தை படமாக்க அனுமதித்த 'களிமண்ணு' படமாகட்டும் ஸ்வேதா மேனனின் நடிப்பு தில்லானது.
இந்நிலையில், கடந்த வாரம் மலையாளத்தில் ஸ்வேதா மேனன் நடித்த 'நேவல் என்ன ஜூவல்' என்கிற படம் வெளியானது.. இந்தப்படம் தயாரிப்பில் இருந்தபோதே, இதில் ஸ்வேதா மேனன் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என ஒரு செய்தி பரவியது.. தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தை பார்த்தபின் தான் ஸ்வேதா மேனன் எத்தகைய ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதில் வயதான ஒரு ஆண் கேரக்டரில் நடித்துள்ளார் ஸ்வேதா மேனன். மேலே உள்ள படத்தில் முகம் நிறைய தாடியும் மீசையுமாக நீங்கள் பார்க்கும் ஆண் வேறு யாருமல்ல, ஸ்வேதா மேனனே தான்.. கெட்டப்பை மாற்றுவதில் கமலுக்கே சவால் விடும் வகையில் இவருக்கு இந்த மேக்கப்பை கச்சிதமாக வடிவமைத்து ரோஷன் என்கிற மேக்கப் கலைஞர் தான்.
இந்தப்படத்தை ரெஞ்சிலால் தாமோதரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பெரும்பகுதி கதைக்களம் சிறைச்சாலையை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது.. அதிலும் ஈரான் நாட்டு சிறைச்சாலையை பின்னணியாக கொண்டிருக்கிறது