மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அந்தப் படத்தை தமிழில் இயக்கி வருகிறார், மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழில், சாது மிரண்டால், பிரண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கியவர்.
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அரவிந்த்சாமி, அமலா பால், நாசர், ரமேஷ் கண்ணா, சூரி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் அரவிந்சாமியும், அமலாபாலும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். அவர்களது குழந்தைகளாக மாஸ்டர் ராகவும், மீனாவின் மகள் நைனிகாவும் நடிக்கிறார்கள்.
அம்ரேஷ் இசை அமைக்கிறார். விஜய் உலக நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். வசனங்களை ரமேஷ் கண்ணா எழுதியுள்ளார். பாலிவுட் நடிகர் ஆப்தாப்ஷிவ்தசானி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார், நிகிஷா படேல் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
தற்போது இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. இது பிஜி தீவில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக படக்குழுவினர் வருகிற 27ந் தேதி பிஜி தீவுக்கு செல்கிறார்கள்.