தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித் - சிவா கூட்டணியில் வெளியான 'வேதாளம்' படம் வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிவிட்டன. நீண்ட நாட்கள் கழித்து, அஜித் நடிப்பில் மீண்டும் வெளிவரும் படம் என்பதால் விவேகம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, சமீபத்தில் வெளியிடப்பட்ட 'விவேகம்' டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
விவேகம் படத்துக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை தனக்கு சாதகமாக புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதாவது, வரும் 24ஆம் தேதி 'விவேகம்' படம் வெளியாகும் திரையரங்குகளில் தான் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் டீஸரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த தகவலை '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் அதிகாரபூர்வமாக டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது. 'வேலைக்காரன்' திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. விவேகம், வேலைக்காரன் இரண்டு படங்களுக்குமே அனிருத்தான் இசையமைப்பாளர். எனவே அவரே விவேகம் தயாரிப்பாளரிடம் பேசி வேலைக்காரன் டீஸரை வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.