இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழில் மட்டுமே அதிகப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா, மலையாளம், தெலுங்குப் படங்களில் இருந்து வரும் வாய்ப்புகளை அவ்வளவு சுலபத்தில் ஏற்பதில்லை. தெலுங்கில் பல கோடிகள் சம்பளமாகக் கொடுக்க சிலர் தயாராக இருந்தாலும் ஏனோ, அவர் அதில் ஆர்வம் செலுத்துவதில்லை.
பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்க, தமிழ் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் பாலகிருஷ்ணாவின் 102வது படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா சம்மதித்தார். பாலகிருஷ்ணாவுடன் ஏற்கனவே நயன்தாரா ஜோடியாக நடித்த 'சிம்ஹா, ஸ்ரீராமராஜ்ஜியம்' ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. இப்போது மூன்றாவது முறையாக பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.
ஐதராபாத்தில், ராமோஜி பிலிம் சிட்டில் இன்று நடக்கும் படப்பிடிப்பின் மூலம் இன்று முதல் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. புதுப் பொலிவுடன் புதிய தோற்றத்தில் நயன்தாரா கலந்து கொள்வதை படத்தின் ஆடை அலங்கார நிபுணரான நீரஜ் கோனா வெளியிட்டுள்ளார்.