Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் படத்தை இணையதளத்தில் வெளியிடாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்

21 ஆக, 2017 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Trisha-request-to-fans

நடிகை த்ரிஷா தற்போது விஜய் சேதுபதியுடன் 96 என்ற படத்தில் நடித்து வருகிறார். சி.பிரேம்குமார் இயக்கும் இந்தப் படத்தில் அவர் பள்ளி மாணவி, ஆசிரியை, நடுத்தர வயதை தாண்டிய தோற்றம் என 3 கெட்அப்களில் நடிக்கிறார். இதற்கான தனது எடையை கணிசமாக குறைத்திருக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்புக்கு சென்ற த்ரிஷாவின் ரசிகர்கள் அவருடன் புகைப்படும் எடுத்துக் கொண்டனர். இந்தப் படத்தை அவர்கள் தங்களது பேஸ்புக் டுவிட்டரில் வெளியிட்டனர். இதனால் 96 படத்திற்காக எடை குறைந்த அவரது படம் வெளிவந்தது. இதைப் பார்த்த த்ரிஷா அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனது ரசிகர்களை எனக்குப் பிடிக்கும், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சந்தோஷமாக சம்மதிக்கிறேன். ஆனால் படப்பிடிப்பு மற்றும் தளத்தில் என்னுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். படத்தில் கதாபாத்திரங்களின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று கடினமாக உழைத்து முடிவெடுக்கும் இயக்குநர், அதை அவர் விரும்பும் நேரத்தில் வெளியிட வேண்டும் என நினைப்பார். எனவே அதை முன்னமே வெளியிடுவது அவருக்கு பெரிய அவமதிப்பு செய்வது போல் ஆகும் என்று எழுதியுள்ளார் த்ரிஷா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in