இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
விஜய் நாயகனாக நடித்து வெளிவந்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் விஜய்யைப் பாராட்டோ பாராட்டு என்று பாராட்டித் தள்ளினர். 'புலி, புலி, புலி' என 'அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசால்ட்டான புலி' என சொல்லிக் கொண்டே போனார். அதன் பின் டி.ஆரின் அந்த 'புலி' பேச்சை வைத்து எக்கச்சக்கமான மீம்ஸ்களும், வீடியோக்களும் உருவாகி நம்மை அசர வைத்தன.
நேற்று நடந்த 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவிலும் அப்படி ஒன்றை நடத்திக் காட்ட பார்த்திபன் விரும்பினாரோ என்னமோ, ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. அவர் பேச்சின் ஆரம்பத்திலேயே 'மெர்சல்' படத்தில் 'தளபதி'யாக தன்னை மாற்றிக் கொண்ட விஜய்யைப் பற்றித் தெரியாமல், 'இளைய தளபதி' என இரண்டு மூன்று முறை சொன்னார். விஜய் ரசிகர்கள் பார்த்திபன் 'இளைய தளபதி' என்று சொன்னது பிடிக்காமல் அவரைப் பேச விடாமல் கத்திக் கொண்டே இருந்தனர். விஜய் எழுந்து ரசிகர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிட்ட பிறகும் ரசிகர்கள் அதை நிறுத்தவில்லை.
எப்படியோ சமாளித்து பார்த்திபன் தொடர்ந்து பேசினார். “பொடிமாஸ் தெரியுமா, பொடிமாஸ், பொடிமாஸ் பண்ணணும்னா முட்டை இருந்தா போதும். ஆனா, மாஸா ஒரு படம் பண்ணணும்னா நிச்சயமா விஜய் மட்டும்தான் வேணும். இந்த மாதிரி பன்ச் டயலாக் யாரு வேணா எழுதலாம், யாரு வேணா பேசலாம். ஆனா, இவருக்கு எழுதினா மட்டும்தான் இவ்வளவு கிளாப்ஸ் பிடைக்கும்.
விஜய்யோட அப்பாவும் அம்மாவும், நிறைய சர்ச்சுக்குலாம் போயி, அங்க வந்து சண்டே மாஸ், கிறிஸ்டின் மாஸ், கிறிஸ்துமஸ் மாஸ்னு நிறைய மாஸுக்குலாம் போயி, வேண்டி, வேண்டி, இவ்வளவு மாஸ் உள்ள ஒரு பிள்ளைய பெத்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.
விஜய்யும், விஜய் ரசிகர்களும் இணைந்தால் அந்தப் படம் 100 கோடி கலெக்ட் பண்ணும், விஜய்யும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்தால் அந்தப் படம் 200 கோடி கலெக்ட் பண்ணும், விஜய், ஏ.ஆர்.ரகுமான், தேனாண்டாள் இணைஞ்சால் அந்தப் படம் 300 கோடி கலெக்ட் பண்ணும். அட்லீ இந்தப் படத்தை டைரக்ட் பண்ணா மிடில் ஈஸ்ட்ல கூட 50 கோடி கலெக்ட் பண்ணும்.
விஜய்யோட அடுத்த படத்துக்கு அமெரிக்காவோட அதிபர் டிரம்ப்பே ஒரு டிவீட் பண்ணுவாரு. உலகத்துல மிகச் சிறந்த சிஎம், நீங்கதான்னு டிவீட் பண்ணப் போறாரு. சிஎம்-னா என்ன அர்த்தம்னு நான் சொல்றன்னா, கலெக்ஷன் மன்னன். உலகத்துலயே மிகச் சிறந்த கலெக்ஷன் மன்னன் விஜய்னு டிவீட் பண்ணுவாரு,” என்றார் பார்த்திபன்.
விஜய்க்கு டி.ராஜேந்தருக்குப் பிறகு இரண்டாவது பிரச்சார பீரங்கி ரெடி.