Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேகம் உலக தரமான படம்: விவேக் ஓபராய்

21 ஆக, 2017 - 10:01 IST
எழுத்தின் அளவு:
Vivegam-is-world-class-movie-says-Vivek-Oberoi

அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன் நடித்துள்ள படம் விவேகம். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார், சிவா இயக்கி உள்ளார். இதில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் நடித்தது பற்றி விவேக் ஓபராய் கூறியதாவது:

ரத்த சரித்திராவுக்கு பிறகு நான் நடித்துள்ள தமிழ் படம் இது. நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தது, சில சூழ்நிலைகளால் நடிக்க முடியாமல் போனது. தமிழ் நாட்டுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தனது தாய் கோயம்புத்தூர் மன்றாடியார் பரம்பரையை சேர்ந்தவர். எங்களுக்கு சொந்தமான வீடுகள், எஸ்டேட்டுகள் காங்கேயம் பகுதியில் உள்ளது. சின்ன வயதில் அடிக்கடி அங்கு வருவேன். இதனால் தமிழும் கொஞ்சம் பேசத் தெரியும்.

தொழில், சமூக சேவை என சினிமாவைத் தாண்டியும் இயங்குவதால் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் தான் நடிக்கிறேன். சிவா மும்பை வந்து இந்த கதையை சொன்னபோது இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். கதை நன்றாக இருக்கிறது எப்படி எடுப்பாரோ என்ற சந்தேகத்துடன் சிவா இயக்கிய வீரம், வேதாளம் படங்களை பார்த்தேன். மிரட்டலாக இருந்தது.

காஜல் அகர்வால் அறிமுகமானதே நான் நடித்த படத்தில் தான். இப்போது அவருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அக்ஷ்ரா ஹாசன் ஸ்டைலிஷான ஹீரோயினாக வலம் வருவார்.

அஜித்துடன் நடித்தது பெருமையான விஷயம். படப்பிடிப்பு முழுக்க அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக தன்னை காட்டிக் கொள்ளவில்லை. சில நேரம் புரொடக்ஷ்ன் பாய் போலவும் வேலை செய்வார். மைனஸ் 17 டிகிரி குளிரில் வெற்று உடம்புடன் நடித்தார். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தமிழில் எந்த நடிகருடனும் நடிக்கத் தயார். கதையும், கேரக்டரும் வலுவாக இருக்க வேண்டும் அவ்வளவு தான்.

விவேகம் படத்தை ஹாலிவுட் தரத்திலான படம் என்கிறார்கள். ஆனால் இது அதையும் தாண்டிய படம். சர்வதேச தரத்திலான தமிழ் படம் என்று கூறலாம். நிச்சயம் இந்தப் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை ஹாலிவுட் சினிமா திரும்பி பார்க்கும் என்றார் விவேக் ஓபராய்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in