Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நம்மை சீண்டுவார்கள், புறக்கணியுங்கள் : மெர்சல் ஆடியோ விழாவில் விஜய் பேச்சு

20 ஆக, 2017 - 23:04 IST
எழுத்தின் அளவு:
Vijay-speech-at-Mersal-Audio-Launch

தெறி வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.


மெர்சல் படத்தில் நிறைய சிறப்பு அம்சங்கள் உள்ளன. தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு இது 100வது படம். விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 25வது ஆண்டு. ஆகையால் படத்தின் இசை வௌியீட்டை சென்னை, நேருஉள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்தினர். நிகழ்ச்சியின் ஆடியோ விழா தனியார் டிவி, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவைகளிலும் நேரடியாக ஔிப்பரப்பட்டது. விழாவில் விஜய் பேசியதாவது...


ரஹ்மானின் 25வது ஆண்டில் நான் பணியாற்றியதை எண்ணி பெருமை கொள்கிறேன். உலகத்துக்கே மெட்டு போட்டு ஆஸ்கர் வாங்கி மெர்சல் ஆக்கியவர், இப்போது மெர்சல்க்கு மெட்டு போட்டுள்ளார். படத்தில் பணியாற்றிய இயக்குநர் அட்லீ உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.


நான் அறிவுரை செய்வதாக எண்ண வேண்டாம். நான் அந்தளவுக்கு பெரிய ஆள் எல்லாம் கிடையாது. ஆனால் நெகட்டீவ் வேண்டாம், உங்க வேலையை சரியாக செய்யுங்கள். யாராவது எதிர்மறையாக பேசினால், அவர்களை கண்டு கொள்ளாதீர்கள் நண்பா என்று தான் சொல்வேன்.


எல்லோரும் நம்மை சீண்டுவார்கள். அதெல்லாம் நடக்கும். அதை புறக்கணித்துவிடுங்கள். எதுவும் இல்லாத போது உங்கள் தன்னம்பிக்கையும், எல்லாம் இருக்கும்போது உங்கள் அணுகுமுறையும் தான் முக்கியம். ஹிட், பிளாப், பிளாக்பஸ்டர் எல்லாம் கொடுத்துவிட்டீர்கள், அதை விட ரசிகர்களாகிய நான் உங்களை சம்பாதித்தது தான்.


அறிவுரை சொன்னால் என் மகன் கூட நான் சொல்வதை கேட்கமாட்டார். எனவே நீங்கள் முடிந்தால் நான் சொன்ன விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள்.


மெர்சல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் துப்பாக்கின்னா தோட்டா இருக்கணும், கத்தின்னா ஷார்ப்பா இருக்கணும், தெறின்னா தெணாவெட்டா இருக்கணும், மெர்சல்ன்னா மிரட்டலா இருக்கணும்.


இவ்வாறு விஜய் பேசினார்.


நிகழ்ச்சியில் காஜல், சமந்தா உள்ளிட்ட மெர்சல் படக்குழுவினர் தவிர்த்து தனுஷ், பார்த்திபன், சிபிராஜ், சாந்தனு, மகத், பூர்ணிமா பாக்யராஜ், அழகப்பன், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பல திரையுல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் மற்றும் தொகுப்பாளினி ரம்யா தொகுத்து வழங்கினர்.


Advertisement
மெர்சல் : தமிழர்களின் பாரம்பரியத்தை பேசும் : அட்லீமெர்சல் : தமிழர்களின் பாரம்பரியத்தை ... விவேகம் உலக தரமான படம்: விவேக் ஓபராய் விவேகம் உலக தரமான படம்: விவேக் ஓபராய்


வாசகர் கருத்து (10)

21 ஆக, 2017 - 11:20 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் இதெல்லாம் பாக்கவச்சிட்டியே தங்கதாரகை... நீ இருந்திருந்தா இந்தமாதிரி நடந்திருக்குமா... தமிழ்நாட்ல தன்னோட படத்த ரிலீஸ் பண்ண முடியாம அழுதுட்டு இப்ப CMன்ரானுங்க..
Rate this:
jenis - chennai,இந்தியா
21 ஆக, 2017 - 11:17 Report Abuse
jenis இவரோட ரசிகர்கள் சமூக வலை தளங்களில் எவ்வளவு கீழ்தரமா நடக்கிறார்கள் அதை என்னைக்காவது பேசிருப்பாரா அதான் ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
Rate this:
21 ஆக, 2017 - 10:25 Report Abuse
Dr. Joseph Vijay S.S.L.C. Fan அதாதே அண்ணே நீங்கள் பண்ணுகிற கோமாளித்தனத்தையும் அதற்கு உங்கள் ரசிக பெருமக்களாகிய நாங்கள் கொடி பிடிப்பதையும் எதிர்ப்பதே இந்த தமிழ் மக்களுக்கு வேலையா போச்சு. நீங்கள் வருங்கால முதல்வர் ஆகி விடுவீர்களே என்கிற பயம்தான் காரணமோ. இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்.
Rate this:
21 ஆக, 2017 - 10:22 Report Abuse
KrishnaMurthy தமிழன் வாழ்த்துங்கள் மனசு இருந்தால்
Rate this:
Narendar Doss - Chennai,இந்தியா
21 ஆக, 2017 - 10:21 Report Abuse
Narendar Doss இதுதான் ரசிகர்களை எமோசனலாக தூண்டுவது.. ஏன் இப்படி பொடி வைத்து பேசுகிறார். ஏன் தேவையில்லாமல் நமக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்றும் அவர்களை புறக்கணியுங்கள் எனும் கூறி ரசிகர்கள் மனதில் வன்மத்தை விதைக்கிறார். ரசிகர்கள் செய்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பவர் எங்கே.. இது போன்று தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பவர் எங்கே
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in