‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த மே மாதம் மலையாளத்தில் 'கோதா' என்கிற படம் வெளியானபோது அதை சாதாரண ஒரு படமாகத்தான் திரையுலகமும் ரசிகர்களும் நினைத்தார்களே தவிர அந்தப்படம் இத்தனை கோடிகளை வசூல் பண்ணும், இத்தனை நாட்கள் ஓடும் என யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
காரணம் ஆவரேஜ் பட்ஜெட்டில் மல்யுத்த வீராங்கனை ஒருவரை உருவாகும் கதையம்சத்துடன் அவ்வளவாக ஸ்டார் வேல்யூ இல்லாத நட்சத்திரங்களுடன் தான் இந்தப்படம் வெளியானது.. அதற்கு சில வாரங்களுக்கு முன் தான் இதே பெண்கள் மல்யுத்தத்தை மையமாக வைத்து வெளியான 'தங்கல்' படமும் வெளியாகி இருந்தது.
ஆனால் என்ன ஆயிற்று..? இதோ இன்னும் சில தினங்களில் நூறாவது நாளை தொடப்போகிறது இந்த 'கோதா'. இதுவரை சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. பஞ்சாபி நடிகையான வாமிகாவை மிகச்சரியாக நேர்த்தியாக இந்தப்படத்தில் பயன்படுத்தி இருந்தார்கள். இந்தப்படத்தின் வெற்றி தான் இதன் இயக்குனர் பஷில் ஜோசப்புக்கு அடுத்ததாக மம்முட்டி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது..
இந்தப்படத்தின் வெற்றிதான் இதில் சாதாரண நாயகனாக நடித்த டொவினோ தாமஸை முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், நடிகர் தனுஷ் தற்போது மலையாளத்தில் ஒரே நேரத்தில் தயாரித்து வரும் இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கும் உயர்த்தியுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.