ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விவேகம். ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களிலும் நடைபெற்றிருக்கிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால், பல்கேரியா நாட்டில் தமிழ்நாடு என்கிற ஒரு ஹோட்டல் நடத்தும் பெண்ணாக நடித்திருக்கிறார்.
அந்த ஏரியாவில் காஜலின் தமிழ்நாடு ஹோட்டலில் மட்டும் தான் தமிழ் நாட்டின் உணவுகள் கிடைக்கும் என்பதால் அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள தமிழர்கள் அவர் ஹோட்டலுக்கு வந்து தான் விரும்பி சாப்பிடுவார்களாம். அப்படி அந்த ஹோட்டலுக்கு அடிக்கடி சாப்பிட வரும் அஜித்திற்கும், காஜல்அகர்வாலுக்கும் காதல் ஏற்படுவதை ஜாலியாக படமாக்கியிருக்கிறாராம் சிவா.
அதோடு, பல்கேரியா நாட்டிலும் தமிழ்ப்பெண்ணாக அழகு மிளிர காட்சி கொடுக்கும் காஜல் அகர்வாலின் அழகில் அஜித் மயங்கிப்போகும் காட்சிகள் மிக இயல்பாக படமாக்கப்பட்டிருக்கிறதாம். ஆக, விவேகம் படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருந்தபோதும், அஜித் - காஜல் அகர்வாலின் ரொமான்ஸ் காட்சிகளும் சற்று தூக்கலாகவே படமாக்கப்பட்டிருக்கிறதாம்.