‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தேனீர் விடுதி எனும் படம் இயக்கி வெளியிட்டு எதிர்பாராத விதத்தில் தோல்வி கண்டு பையையும், கையையும், அந்த நேரம் இசையமைக்க வந்த ஏராளமான வாய்ப்புக்களையும் சுட்டுக் கொண்ட இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். இனி., இசைப் பணி மட்டும் தான் நோ இயக்கம் என பேட்டி எல்லாம் கொடுத்தார்!
ஆனால் இப்பொழுது பழைய குருடி கதவை திறடி கதையாக., "பீக்காக் புரடக்ஷன்ஸ்" எனும் பேனரில் "கேரள நாட்டிளம் பெண்களுடனே...!" எனும் பெயரில் ஒரு படத்தை இயக்கி இசையமைக்க துணிந்து விட்டார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் தான் இயக்கிய "தேனீர் விடுதி" படத்தின் பெயரை போட்டு மேற்படி படத்தை இயக்கியவரின் அடுத்த படம் என்று பப்ளிசிட்டி செய்யாமல், பூ, களவாணி படங்களின் இசையமைப்பாளரது நெக்ஸ்ட் ஃபிலிம் என பில்ட் அப் கொடுத்து வருவது தான். அவருக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி போல! எப்படியோ இசையமைப்பாளர் இந்த முறையாவது இயக்கத்தில் வெற்றி பெற்றால் சரி!!