ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தர்மதுரை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமியும், நடிகர் விஜய்சேதுபதியும் மீண்டும் இணையும் படம் மாமனிதன். தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணையும் நான்காவது படம் இது. இவற்றில் இடம் பொருள் ஏவல் படம் இன்னும் ரிலீசாகவில்லை.
மாமனிதன் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகியும் அப்படத்தின் அடுத்தகட்ட நகர்வு பற்றி யாதொரு தகவலும் இல்லை. இந்நிலையில் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கவிருப்பதாக அறிவித்துள்ளார் இயக்குநர் சீனுராமசாமி.
தென் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து மாமனிதன் படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.