டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'வாயை மூடிப் பேசவும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். இதுவரை 10 படங்களுக்கு இசையமைத்துள்ள அவரது இசையில் வெளிவந்த 'சதுரங்க வேட்டை, முண்டாசுபட்டி, ஜோக்கர், பா பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்கள் முக்கியமான படங்கள்.
ஷான் இசையமைப்பாளராக பிரபலமானதை விட பாடகராக மிகவும் பிரபலம். அவர் பாடிய 'மனசுல சூரக் காத்து, அடியே அழகே, வா மச்சானே, வென்பனி மலரே,' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.
'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் ஷான் ரோல்டனின் இசை அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என விமர்சகர்களும், ரசிகர்களும் தெரிவித்திருந்தார்கள். படத்தின் முக்கிய காட்சிகளில் கூட முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்த 'விஐபி' தீம் மியுசிக்கைத்தான் பயன்படுத்தியிருந்தார்கள்.
நேற்று 'விஐபி 2' படத்தின் மாபெரும் வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து ஒரு டுவீட் செய்தார் ஷான் ரோல்டன். அந்த டிவீட்டில் பல ரசிகர்கள் 'விஐபி 2' படத்தின் இசை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதனால் கோபமடைந்த ஷான் ரோல்டன் அடுத்தடுத்து சில கோபமான டுவீட்டுகளைப் பதிவு செய்தார்.
“ஒருவரின் மதிப்பை காலமே முடிவு செய்யும். உழைத்தால்தான் உயர்வு. இல்லையெனில், வானத்தில் வீற்றிருப்பவரும் வீழ்வர். எல்லா கருத்துக்களும் மதிக்கத்தக்கவை. இழிவு மொழியின் பலத்தை நாடும் என் நண்பரகளுக்கும் நன்றிகள். சத்தங்கள் கருத்துக்களானால், எல்லோருமே கலைஞர்கள்தான். பயிறச்சி தேவையில்லை. நாம் நினைப்பதெல்லாம் சரியென்ற போதை இருந்தால், இறைவனுக்கு ஏது வேலை ?,” என அவருடைய மொத்த கோபத்தையும் கொட்டிவிட்டார்.
சில தனுஷ் ரசிகர்கள் வரம்பு மீறி கெட்ட வார்த்தைகளால் அவரைத் திட்டியதே இந்த கோபமான பதிவுக்குக் காரணம்.