மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
1981ம் ஆண்டு வெளிவந்த படம் மீண்டும் கோகிலா. சாருசித்ரா பிலிம்ஸ் சார்பில் டி.ஆர்.சீனிவாசன் தயாரித்த இந்தப் படத்தை சி.என்.ரங்கராஜன் இயக்கினார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி, தீபா நடித்திருந்தார்கள், இளையராஜா இசை அமைத்திருந்தார். என்.கே.விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
திருமணமான கமல்ஹாசன், அழகான மனைவி ஸ்ரீதேவி இருக்க, கிளாமரான நடிகை தீபா பின்னால் சபலத்தோடு சுற்றுவார். பின்பு அவர் மனம் திருந்தி மீண்டும் தன் மனைவி கோகிலாவிடம் எப்படி வருகிறார் என்கிற கதை. காமெடி கலந்த பேமிலி செண்டிமெண்ட் திரைக்கதை. கமல், ஸ்ரீதேவி பெண் பார்க்கும் காட்சியில் வரும் "சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி..." என்கிற பாடலில் வெற்றிலை உரல் சத்தத்தைகூட இசையாக மாற்றிய இளையராஜாவின் இசை படத்துக்கு உயிர். "ராதா ராதா நீ எங்கே... கண்ணன் எங்கே நான் அங்கே..." என உருக வைக்கும் மெலடியும் உண்டு.
தற்போது இந்தப் படம் மீண்டும் வெளிவர இருக்கிறது. டார்வின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கும், சினிமாஸ்கோப் வடிவத்துக்கும் மாற்றி இருக்கிறார்கள். கமல்ஹாசன் பிறந்த நாளில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.