மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பிரபல பாலிவுட் நடிகை மூன் மூன் சென்னின் மகள் ரியா சென். இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு குட்லக், அரசாட்சி படங்களில் நடித்தார். இந்தி, பெங்காலி, மராட்டிய படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சரியான வாய்ப்பு இல்லாததால் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
36 வயதாகும் ரியா சென் இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தான் காதலித்து வந்த சிவம் திவாரி என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். புனேயில் பெங்காலி முறைப்படி எளிமையாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை ரியா சென்னின் சகோதரியான நடிகை ரெய்சா சென் முன்னின்று நடத்தினார். திருமணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப்போவதாக ரியா சென் கூறியுள்ளார்.