ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில் எண்ணிக்கையில் வேண்டுமானால் அஜித் ரசிகர்கள் குறைவாக இருக்கலாம்.. ஆனால் படத்தின் பப்ளிசிட்டி மற்றும் புரமோஷன் காட்சிகளில் அஜித் ரசிகர்கள் பலே கில்லாடிகள் என்றே கேரளாவில் காணும் காட்சிகள் சொல்லாமல் சொல்கின்றன. படத்தை வாங்கி வெளியிடுவது 'புலி முருகன்' பட தயாரிப்பாளர் என்பதால் பப்ளிசிட்டியில் தூள் கிளப்பி வருகிறார்.
கேரளாவின் சுவர்களில் திரும்பிய பக்கமெல்லாம் விவேகம் படத்தின் போஸ்டர்கள் தான் அலங்கரிக்கின்றன.. இது போதாதென்று ரசிகர் மன்றங்களும் தங்களது பங்கிற்கு போஸ்டர்கள், பிளக்ஸ், கட் அவுட் என கலக்கி வருகின்றனர்..
இதில் மற்ற மலையாள முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களையே வாய்பிளக்க செய்துள்ளது என்றால் அது அஜித்திற்காக உருவாகியுள்ள மெகா கட் அவுட் தான். திருவனந்தபுரம் அஜித் தலைமை ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள், இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் முதன்முறையாக 90 அடியில் பிரமாண்டமான கட்வுட்டை உருவாக்கியுள்ளனர்.
இதனை உருவாக்க பத்து பேர், தங்களது பத்து நாள் கடின உழைப்பை கொட்டியுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இதற்காக செலவு செய்துள்ளனர். இதுதவிர விவேகம் ரிலீஸ் தினத்தில் 50 தியேட்டர்களில் ரசிகர் மன்ற சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 'விவேகம்' கேரளாவில் 309 தியேட்டர்களில் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.