ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் நடித்துள்ள படம் ஸ்கெட்ச். வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் வட சென்னையைச் சேர்ந்த பைக் திருடனாக நடித்துள்ளார் விக்ரம். அவருடன் தமன்னா, ஸ்ரீபிரியங்கா, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். முதன்முதலாக சூரி இந்த படத்தில் தான் விக்ரமுடன் இணைந்திருக்கிறார்.
தற்போது இந்த ஸ்கெட்ச் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து சாமி-2வில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் விக்ரம். இந்நிலையில், ஏற்கனவே ஸ்கெட்ச் படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், அடுத்து டீசரை வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் மெர்சல் படத்துடன் ஸ்கெட்ச் படத்தை வெளியிடுவதாக சொல்கிறார்கள்.
முன்னதாக, படத்திற்கு பரபரப்பு கூட்டும் முயற்சியாக, சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் வெளியாகும் தியேட்டர்களில் ஸ்கெட்ச் படத்தின் டீசரையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.