Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய், விஷாலை ஆட வைப்பேன்: நடன இயக்குனர் சிவராக் சங்கர்

18 ஆக, 2017 - 14:17 IST
எழுத்தின் அளவு:
I-will-sure-choreograph-to-Vijay-and-Vishal-says-siva-rock-sankar

ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானவர் மாஸ்டர் சிவ ராக் சங்கர். அப்படத்தில் இடம் பெற்ற "சிலாக்கி டும்மா" என்ற பாடலுக்கு "டெத் குத்து" என்ற புதிய ஸ்டைலில் நடனம் அமைத்து பாராட்டுகளை பெற்றார். முத்தின கத்திரிக்காய் படத்தில் சுந்தர் சியையே நடனமாட வைத்தவர். தற்போது மீசைய முறுக்கு படத்தின் அனைத்து பாடல்களுக்கும் நடனம் அமைத்து பிசியான நடன இயக்குனராகிவிட்டார். அவர் அளித்த பேட்டி வருமாறு:

சினிமாவில் முதன் முதலில் எனக்கு நடன இயக்குநராக வாய்ப்பு தந்தவர் இயக்குநர் சுந்தர்.சி தான். முத்தின கத்திரிக்காய் படத்தில் அவரை நடனமாட வைத்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதை தொடர்ந்து எனக்கு மீசைய முறுக்கு படத்தில் அனைத்து பாடலுக்கும் நடனம் அமைக்க எனக்கு வாய்ப்பு தந்தவரும் சுந்தர்.சி தான். மீசைய முறுக்கு படத்தில் வரும் "அடியே சக்கரக்கட்டி " பாடலுக்கு மட்டும் தான் நடனம் அமைக்க சென்றேன். என்னுடைய நடன திறன் பிடித்து போய் ஹிப்ஹாப் தமிழா ஆதி என்னை அனைத்து பாடலுக்கும் நடனம் அமைக்கும் படி கூறினார்.

இதைத்தொடர்ந்து ரம்மி இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கும், இன்னும் சில படத்துக்கும் நடனம் அமைத்து வருகிறேன். சிலாக்கி டும்மா" பாடலில் இடம்பெற்றுள்ள நடனம் விஜய்க்கும், அவருடைய மகனுக்கும் மிகவும் பிடிக்கும் என்று அவரே என்னுடைய உதவி நடன இயக்குநரை ஒரு படப்பிடிப்பில் சந்தித்த போது கூறியுள்ளார். அது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. எனக்கு விஜய், விஷால் , தனுஷ் என்று நிறைய பேரின் பாடல்களுக்கு நடனம் அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. ராக், ஜாஸ், கிளாசிக்கல் என்று அனைத்தையும் கலந்து புதிய நடன அசைவுகளை கொண்டு ஒரு நடனம் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என்றார் மாஸ்டர் சிவ ராக் சங்கர்.​

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in