ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ஞ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் முதல் படம் மேயாதமான். வைபவ், சின்னத்திரை நடிகை பிரியா பவானி சங்கர், இந்துஜா, அருண் பிரசாந்த், அமுருதா சீனிவாசன் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரசன்ன குமார் இசை அமைக்கிறார்கள். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்கிறார். ரத்னகுமார் என்ற புதுமுகம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
நான் இயக்கிய மது என்ற குறும்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பார்த்து பாராட்டினார். அதனை தியேட்டரிலும் வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் படம் தயாரிக்க முடிவு செய்ததும். மது குறும்படத்தை பெரிய திரைப்படத்துக்கான திரைக்கதையாக எழுதுமாறு கூறினார். அதன்படி 3 மாதங்கள் வரை உட்கார்ந்து பெரிய திரைப்படமாக உருவாக்கினேன். அந்த கதைதான் மேயாத மான்.
படத்தில் வைபவ் கூச்ச சுபாவம் உள்ளவர். பெண்களை கண்டால் விலகி நிற்பவர். அதனால் அவரது கேரக்டரை உணர்த்தும் வண்ணம் மேயாதமான் என்று தலைப்பு வைத்தோம். பிரியா பவானி சங்கர் அவரை எப்படி காதலிக்க வைக்கிறார், தன்னை விரும்ப வைக்கிறார் என்பதை காமெடியாக சொல்லுகிற படம்.
படத்தில் வைபவ் ஒரு மேடை கச்சேரி குழு நடத்துகிறவராக வருகிறார். அதனால் படத்தில் 7 பாடல்கள் இடம் பெறுகிறது. கூடவே தங்கச்சி செண்டிமெண்டும் உண்டு. தங்கச்சியை புகழ்ந்து ஒரு பாடலும் இருக்கிறது. தங்கை கேரக்டருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. தங்கையாக இந்துஜா நடித்துள்ளார். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவருகிறது. என்றார் ரத்ன குமார்.