பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுஷ், அனிருத் கூட்டணியில் வெளிவந்த “3, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன்' ஆகிய படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களைக் கவர்ந்தன. இந்தக் கூட்டணிக்கு DNA என்று கூட பெயர் வைத்து இருவரின் ரசிகர்களும் இந்தக் கூட்டணியைக் கொண்டாடினார்கள்.
தனுஷ் தயாரித்த “எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, நானும் ரௌடிதான்” படங்களின் வெற்றிக்கும் அனிருத்தின் இசை முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், இந்தக் கூட்டணி திடீரென பிரிந்துவிட்டது. அதன் பின் அனிருத் இடத்தை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பிடித்துக் கொண்டார். இருந்தாலும் தனுஷ் - அனிருத் கூட்டணி போல, தனுஷ் - ஷான் ரோல்டன் கூட்டணி இல்லை என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அது 'வேலையில்லா பட்டதாரி 2' படத்திலும் எதிரொலித்தது.
இது பற்றி தனுஷிடம் கேட்ட போது, “இரண்டாம் பாகம் வரும் போது, அனிருத்தே பண்ணியிருந்தால் கூட முதல் பாகத்தோட கம்பேர் பண்ணதான் செய்வாங்க. இதை அனிருத்தே என்கிட்ட சொன்னாரு. ஷான் செல்பிஷா இல்லாம தன் திறமையைக் காட்டணும்னு நினைக்காம, இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் பண்ணிக் கொடுத்தாரு,” என்றார்.
மீண்டும் அனிருத்துடன் எப்போது இணைந்து படம் செய்வீர்கள் என்று கேட்டதற்கு, “அனிருத் கூட சேர்ந்து பண்ணக் கூடாதுன்னுலாம் எதுவுமில்லை. நான் முன்னாடியே சொல்லியிருந்தேன். அவருக்குன்னு ஒரு ஸ்டைல் ஆப் மியுசிக் பண்றாரு இப்ப. ரொம்ப வெஸ்டர்ன் ஒரு ஸ்டைல் பாலோ பண்றாரு. ஒரு கதைக்கு அப்படிப்பட்ட மியூசிக் தேவைன்னா கண்டிப்பா அவர் கூட பண்ணுவேன்,” என்றார்.
தனுஷ் - அனிருத் கூட்டணியில் வெளிவந்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. 'மாரி' முதல் பாகம் லோக்கல் ரவுடியின் கதை, ஒரு வேளை இரண்டாம் பாகத்தை வெஸ்டர்ன் ரவுடி கதையாக எடுத்தால் அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கலாம்.