வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருப்பவர் நடிகர் அஜித். எந்த விதமான பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் திரையுலகத்தில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இன்று வளர்ந்து நிற்கிறார். கடந்த பல வருடங்களாகவே அவருடைய படங்களுக்கு மிகப் பெரும் ஓபனிங் இருந்து வருகிறது. படம் நன்றாக இல்லை என்றால் கூட அது வசூலைக் கொடுத்துவிடும் என்ற நம்பிக்கை திரையுலகத்தினரிடம் உண்டு.
தமிழில் நாயகனாக அறிமுகமாவதற்கு முன்னால் தெலுங்கில் தான் முதன் முதலாக நாயகனாக 'பிரேம புஸ்தகம்' படத்தின் மூலம் அறிமுகமானார் அஜித். ஆனால், இன்று வரையிலும் தெலுங்கில் அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகவில்லை என்பதே உண்மை. அவர் நடித்த பல படங்கள் ஆக்ஷ்ன் படங்கள்தான், அப்படிப்பட்ட படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்தும் வெளியாகியுள்ளன. ஆனால், அவையனைத்தும் இதுவரை வெற்றிப் படங்களாகவோ, வசூல் படங்களாகவோ அமையவில்லை.
அஜித் நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள 'விவேகம்' படத்தை ஹாலிவுட் படத்தைப் போல உருவாக்கியிருக்கிறார்கள் என நேற்று வெளியான டிரைலரைப் பார்த்துப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை ஏற்கெனவே விற்றுவிட்டார்கள். ஆனால், படம் எப்போது வெளியாகிறது என்பது பற்றி இதுவரை சரியாக அறிவிக்கவில்லை, விரைவில் வருகிறது என்றே இன்றும் விளம்பரம் வெளியிட்டுள்ளார்கள்.
அது மட்டுமல்ல வெளியீட்டிற்கு முந்தைய எந்த ஒரு புரோமோஷனும் படத்திற்கு இதுவரை நடக்கவில்லையாம். இத்தனைக்கும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக உள்ள 'விவேகம்' படத்தின் இயக்குனர் சிவா, தெலுங்கில் மூன்று படங்களை இயக்கியவர். அப்படியிருந்தும் அவர் கூட அஜித்தின் தெலுங்கு மார்க்கெட்டை உயர்த்தும் வேலைகள் எதையும் செய்யவில்லை என டோலிவுட் வினியோகஸ்தர்கள் கவலைப்படுகிறார்களாம்.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்த விஜய் ஆண்டனி கூட 'பிச்சைக்காரன்' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கு அனைவருக்கும் தெரிந்த நடிகராக மாறிவிட்டார். அப்படியிருக்க அஜித் தரப்பில் தெலுங்கு மார்க்கெட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்களே என்கின்றனர் அவர்கள்.
தெலுங்கிலிருந்து மகேஷ் பாபு கூட தமிழ்ப் பக்கம் வந்துவிட்டார், ஆனால், அஜித்திற்கு தெலுங்குப் பக்கமும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருப்பது ஏனோ...?.