ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிறிய இடைவெளிக்குப் பிறகு மனோஜ் மஞ்சு நடித்து வரும் தெலுங்குப் படம் ஒக்கடு மிகிலடு. இது இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை கதை என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன் டோல்டு ஸ்டோரி (சொல்லப்படாத கதை) என்று துணை தலைப்பும் வைத்திருக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் இலங்கையில் நடந்தது. இதனை பத்மஜா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜய் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். வி.கே.ராமராஜு ஒளிப்பதிவு செய்கிறார், சிவா நத்திகம் இசை அமைக்கிறார். ரெஜினா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்தப் படம் தமிழில் நான் திரும்ப வருவேன் என்ற பெயரில் வெளிவருகிறது. தமிழ் வசனம் பாடல்களை சுரேஷ் ஜித்தன் எழுதியுள்ளார். படத்தில் பிரபாகரன் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அடுத்த மாதம் ஆந்திராவில் வெளிவருகிறது. அப்போதே தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். பிரபாகரன் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் தமிழில் படம் வெளிவருவதில் சிக்கல் இருக்கும் என்கிறார்கள்.