பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நிக்கி கல்ராணியின் தாய்மொழி கன்னடம் என்றாலும், தமிழ், மலையாள படங்களில் நடிக்கும் போது, தன் சொந்த குரலிலேயே பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்டால்,'எனக்கு, ஆங்கிலமும், கன்னடமும் மட்டுமே முதலில் சரளமாக பேசத் தெரியும்; ஆனால், படங்களில் நடிக்கும் போது, நம் கேரக்டரையும், வசனத்தையும் உணர்ந்து நடிக்க வேண்டுமானால், சம்பந்தபட்ட மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். இதனால், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில், சரளமாக பேசக் கற்றுக் கொண்டேன். இதனால், இந்த மொழிப் படங்களில் நடிப்பது, தற்போது எனக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது' என்கிறார்.
'பழம்பெரும் நடிகையான, லட்சுமிக்கு மட்டுமே, பல மொழிகளில் சரளமாக பேசத் தெரியும்; இப்போது, அந்த பெருமை, நிக்கி கல்ராணிக்கு கிடைத்துள்ளது. படங்களில் நடித்தோமா, வசனங்களுக்கு வாயசைத்து விட்டு போனோமா என, கடமையாக செய்யாமல், பொறுப்பை உணர்ந்து, வேலை செய்யும் நிக்கியின் செயல் பாராட்டுக்குரியது' என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.