Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

X வீடியோஸ் ஆபாச படம் கிடையாது : சஜோ சுந்தர்

17 ஆக, 2017 - 15:20 IST
எழுத்தின் அளவு:
My-film-X-Videos-is-not-a-B-grade,-C-grade-or-porn-film---Sajo-Sunder

திருநல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சஜோ சுந்தர். பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர், இப்போது பாலிவுட்டில் இயக்குநராகியுள்ளார். முதல்படமே வில்லங்கமான சப்ஜெக்ட்டை ஒன்றை கையில் எடுத்துள்ளார். ஆபாச வீடியோக்கள் தொடர்பாக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி X வீடியோஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பற்றியும், தன் சினிமா பயணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது...

உங்களை பற்றி சொல்லுங்க?
தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் பிறந்தவன் நான். பள்ளி, கல்லூரி எல்லாம் திருநெல்வேலியிலேயே முடித்துவிட்டு பணி நிமித்தம் காரணமாக சென்னை வந்தேன். தொழிலதிபராக வேண்டும் என்பதே என் கனவு. ஆகையால் சொந்தமாக தொழில் தொடங்க எண்ணினேன். ஆனால் என் வாழ்க்கை சினிமா பக்கம் சென்றுவிட்டது. சின்னத்திரையில் பிரபலமான கதாசிரியர் அசோக் குமாரிடம் உதவியாளராக சேர்ந்தேன். இயக்குநர்கள் ஹரி, பிரகாஷ் ராஜிடமும் உதவியாளராக பணியாற்றினே். இப்போது சொந்தமாக படம் கலர் ஷேடோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, X வீடியோஸ் படத்தையும் இயக்கி உள்ளேன்.

X வீடியோஸ் எந்த மாதிரியான படம்?
ஆபாச வீடியோக்கள் தொடர்பாக நடக்கும் குற்றங்களை மையமாக வைத்து X வீடியோஸ் படம் உருவாகி உள்ளது. ஆபாச இணையதளங்களில் லட்சக்கணக்கான ஆபாச வீடியோக்கள் பரவி கிடக்கிறது. கோடிக்கணக்கான பேர் இதை பார்க்கவும் செய்கின்றனர். இன்னும் சிலர் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடக்கும் செக்ஸ் தொடர்பான விஷயங்களை படமெடுத்து அதை இணையதளங்களில் அப்லோடு செய்கின்றனர். அப்படி செய்பவர்களுக்கு எதிரான படமாகவும், இதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களை மையப்படுத்தியும் இப்படம் உருவாகி உள்ளது. மேலும் இப்படம் ஒரு விழிப்புணர்வு படமாகவும் உருவாகி உள்ளது. என்னுடைய படம் பி கிரேடு, சி கிரேடு படமோ அல்லது ஆபாச படமோ கிடையாது. சமூகத்திற்கு எதிரான எந்த ஒரு படத்தையும் நான் எடுக்க மாட்டேன்.

எதற்கு படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்தீர்கள்?
தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது. என்னுடைய படத்திற்கு கவர்ச்சியான தலைப்பு வைக்க வேண்டும் என்று எண்ணினேன், ஆகையால் இந்த தலைப்பை தேர்வு செய்தேன். என்னுடைய படத்தில் கதையின் பிரதானமே தவறான வீடியோக்கள் தான். ஆகையால் இப்படியொரு தலைப்பு வைத்தேன்.

இந்தப்படத்திற்கு சென்சாரில் எந்த மாதிரி பிரச்னை வந்தது?
எனது X வீடியோஸ் படத்தை பார்த்த சென்சார் போர்டு பாராட்டியது. ஆனால் ஏ சர்டிபிகேட் தான் தந்தார்கள். நான் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. படத்தில் ஒரு நிர்வாண காட்சி இருந்தது. அதை நீக்கும்படி சொன்னார்கள், ஆனால் அந்தக்காட்சியை நீக்கிவிட்டால் படத்தில் சொல்ல வந்த விஷயமே சொல்ல முடியாமல் போகும், ஆகையால் அந்தக்காட்சியை நீக்க முடியாது என்று கூறினேன். கதைக்கு அந்தக்காட்சி தேவைப்படுகிறது. ஆனால் அது ஆபாசமாக இருக்காது. படத்தில் செக்ஸ் தொடர்பான காட்சிகள் எதுவும் கிடையாது என்று வாதிட்டேன். சென்சொர் அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.

பாலிவுட்டில் எந்த நடிகரை இயக்க ஆசை?
அமிதாப், ஷாரூக்கான், சல்மான்.... பாலிவுட்டில் நிறைய நடிகர்களை எனக்கு பிடிக்கும். அவர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. ஆனாலும் இவர்கள் எல்லோரையும் விட அமீர்கானை எனக்கும் ரொம்ப பிடிக்கும். அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in