Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நீதானே....' - காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

17 ஆக, 2017 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Vijay-fans-waiting-for-Mersal-,-NEETHANAE-track

சமூக வலைத்தளங்களில் இன்று கடுமையான சண்டை, சச்சரவுகளைப் பார்க்கலாம். அது வேறு யாருக்கோ நடக்கப் போவதில்லை, அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையில் தான் நடக்கப் போகிறது. நள்ளிரவு 12 மணியிலிருந்தே அஜித் ரசிகர்கள் அதை ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று இரவு 10 மணிக்கு திடீரென, நள்ளிரவு 12.01 முதல் 'விவேகம்' டிரைலர் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதற்காகவே காத்திருந்த அஜித் ரசிகர்கள், வழக்கம் போல அவர்களது தூக்கத்தைத் தொலைத்து இந்த 12 மணி நேரத்திற்குள் டிரைலரை புதிய சாதனை படைக்க வைத்துவிட்டார்கள்.

கடந்த சில நாட்களாகவே அடுத்த வாரம் வெளியாகும் 'விவேகம்' படத்தையும் மீறி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் பாடல்களைப் பற்றிய தகவல்களும், விவரங்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து டிரென்டிங்கில் வந்து கொண்டிருந்தன. அஜித் ரசிகர்களுக்கு 'விவேகம்' படத்தின் டிரைலர், படம் தவிர மற்ற அனைத்தும் வெளிவந்துவிட்டதால் எதைப் பற்றிப் பேசுவது என்பது இருந்தது. அதனால், டிரைலர் வந்ததும் ஆரம்பித்துவிட்டார்கள், அடுத்த வாரம் படம் வரும் வரை டிரைலரைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

'விவேகம்' டிரைலருக்குப் போட்டியாக இன்று விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'நீதானே...' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக பாடலின் டீசரை நண்பகல் 12 மணிக்கு வெளியிட உள்ளார்கள்.

கடந்த வாரம் வெளியான 'ஆளப் போறான் தமிழன்...' பாடலை சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற வைத்த விஜய் ரசிகர்கள் இன்று மாலை 'நீதானே...' பாடலை பெரிய அளவில் சாதனை புரிய வைக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

'விவேகம்' டிரைலரின் பன்ச் டயலாக்குகளால் கொஞ்சம் வெறுப்பாகி இருக்கும் விஜய் ரசிகர்கள் இன்று மாலைக்காக காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in