Advertisement

சிறப்புச்செய்திகள்

'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேகம் டிரைலர் எப்படி...? - ஓர் பார்வை

17 ஆக, 2017 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Review-of-Vivegam-Trailer

'வேதாளம்' படத்தின் டிரைலரை அஜித் ரசிகர்கள் எவ்வளவோ எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வரை டிரைலவர் வராமலேயே படம் வெளிவந்து வசூல் சாதனை படைத்தது.

'விவேகம்' படத்தின் முதல் பார்வை, டீசர், சிங்கிளாக வெளியான பாடல்கள், முழு பாடல்கள் என அடுத்தடுத்து கொண்டாட்டமாக இருந்த அஜித் ரசிகர்களுக்கு இன்றைய கொண்ட்டாட்டமாக 'விவேகம்' படத்தின் டிரைலரை வழக்கம் போல நள்ளிரவில் வெளியிட்டு கொண்டாட வைத்துவிட்டார்கள்.

'விவேகம்' டீசரே இது ஒரு ஹாலிவுட் படம் போல இருக்கிறது என்று சொல்ல வைத்தது. டிரைலரும் அதையே மீண்டும் உறுதி செய்துள்ளது. காஜல் வரும் அந்த சில வினாடிகளில் புடவையில் வருவதால் தான் ஒரு தமிழ்ப் படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. வெளிநாட்டில் எந்தப் படம் எடுத்தாலும் பார்க்க ஹாலிவுட் படம் போலத்தான் இருக்கும் என்று சொல்பவர்களுக்கு அதிரடியான ஆக்ஷ்ன் காட்சிகளை டிரைலரில் அதிகமாக வைத்து இது உண்மையிலேயே ஹாலிவுட் படம் போலத்தான் இருக்கும் என்று அனுபவத்தைக் கொடுக்கிறார்கள்.

அஜித்தின் சால்ட் அன்ட் பெப்பர் தோற்றம் படத்தின் கலருக்கு இன்னும் அதிகப்படியான ஹாலிவுட் அடையாளத்தைத் தருகிறது. அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அதிரடியான பன்ச் வசனங்களையும் டிரைலரில் சேர்த்திருக்கிறார்கள்.

பன்ச் வசனம் 1
"நான் யாருங்கறத, எப்பவுமே நான் முடிவு பண்றதில்லை. என் எதிர்ல நிக்கிறவங்கதான் முடிவு பண்ணுவாங்க. அவங்களுக்கு நான் நண்பனா, இல்லை எதிரியான்னு"

பன்ச் வசனம் 2
"நாம ஒருத்தரை ஒருத்தர் காப்பாத்திக்கிறதில்லை, நம்மள காப்பாத்தறது எது தெரியுமா......."

பன்ச் வசனம் 3
"உன் கூட இருக்கிறது சந்தோஷம்கிறத விட நீதான் என் சந்தோஷமாவே இருக்க...."

பன்ச் வசனம் 4
"போராடாம அவன் போக மாட்டான், சாகவும் மாட்டான், பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வரான்..."

பன்ச் வசனம் 5
யு வில் சீ மை ரேஜ்... (நீ என் கோபத்தைப் பார்க்கப் போற..)

ஹெலிகாப்டர், பீரங்கிகள், மிஷின் கன், ஜேம்ஸ்பான்ட் டைப் கார் என ஆக்ஷ்னில் அசத்துவதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை வைத்துக் கொண்டு பரபரப்பான, விறுவிறுப்பான காட்சிகளை டிரைலரில் சேர்த்திருக்கிறார்கள்.

அக்ஷ்ராஹாசன் ஒரு சில வினாடிகள் மட்டுமே டிரைலரில் வந்து வேகமாக ஓடி விடுகிறார், வசனமும் இல்லை. விவேக் ஓபராய்யை அஜித்தைப் புகழ்ந்து பேச வைத்துள்ளார்கள்.

வெற்றியின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும், ரூபனின் படத்தொகுப்பும், மிலனின் அரங்க அமைப்பும் டிரைலரில் இருக்கும் விறுவிறுப்பை படத்திலும் கொடுத்திருப்பார்கள் என நம்பலாம்.

சிவா - அஜித் கூட்டணி மீண்டுமா என்று கேள்வி கேட்டவர்களுக்கு 'வீரம், வேதாளம்' படங்களை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தைக் கொடுக்க உள்ளேன் என இயக்குனர் சிவா இந்த டிரைலர் மூலம் பதிலளித்துள்ளார்.

இருந்தாலும் டிரைலரை மொத்தமாகப் பார்ப்பதற்கு ஒரு 'வீடியோ கேம்'-ஐப் பார்த்த உணர்வுதான் அதிகம் ஏற்படுகிறது.

டீசர், டிரைலர், பாடல்கள் எது எப்படி இருந்தாலும் இது அஜித் படம், அதனால் சாதனையை நிகழ்த்தாமல் விட மாட்டோம் என டிரைலர் வெளியான 10 மணி நேரத்திற்குள் 20 லட்சம் பார்வைகளையும், 3 லட்சம் லைக்குளையும் தொட வைத்துவிட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

'விவேகம்' டிரைலர் யு டியுபில் உலக சாதனை புரியப் போவது உறுதி என்பது மட்டும் உண்மை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in