இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
புதுமுகங்களையோ, வளரும் நடிகர்களையோ வைத்து படம் இயக்குபவர்கள், தங்களது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து, டீசர், டிரைலர் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே ரிலீஸ் நேரத்தில் அதை நன்றாக அறுவடை செய்ய முடியும். அந்தவிதமாக மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் 'தரங்கம்' படத்தின் டீசர் அதன் வித்தியாசமான உருவாக்கத்திற்காக கவனம் ஈர்த்துள்ளது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் டொமினிக் அருண் என்பவர் இயக்கியுள்ளார்.
இயக்குனர் தான் அறிமுகமே தவிர, கதாநாயகனாக நடித்திருப்பது மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸ் தான். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தை தயாரிப்பது கூட நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தான்.. மலையாளத்தில் தனுஷ் தயாரிக்கும் முதல் படம் இது. இந்தப்படத்தின் டீசரை காட்சிகள் எதுவுமின்றி வெறும் குரல்களை வைத்து மட்டுமே உருவாக்கியுள்ளார்கள். அதிலும் அந்த குரல்கள் அனைத்தும் விதவிதமான மொழிகளில் கடவுளை அழைப்பதாகவும், வானொலியில் இருந்து ஒரு பழைய படத்தின் வசனம் ஒன்றும் ஒலிப்பதாக இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.