பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல காமெடி மற்றும் குணச்சித்ர நடிகர் அல்வா வாசு என்கிற வாசுதேவன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர் வாசுதேவன். பி.ஏ., பட்டம் பெற்ற இவர், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார். மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய வாசுதேவன், 'வாழ்க்கை சக்கரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்தாலும் சத்யராஜின் அமைதிப்படை படம் தான் அவரை பிரபலமாக்கியது. அந்தப்படத்தில் அவர், சத்யராஜூக்கு அல்வா செட் பண்ணி கொடுப்பார். அதனாலேயே அவருடன் அல்வா என்ற அடைமொழியும் ஒட்டிக்கொள்ள அல்வா வாசுவானார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். அதிலும் வடிவேலுவுடன் இவர் நடித்த "இங்கிலீஷ்காரன், கருப்புசாமி குத்தைக்காரன், எல்லாம் அவன் செயல்" உட்பட... பல படங்கள் காமெடியில் அவரை பிரபலமாக்கியது.
நூற்றுகணக்கான படங்களில் நடித்து, மக்களை சிரிக்க வைத்த கலைஞர், இப்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளார். வாசுவிற்கு கல்லீரல் முழுமையாக செயலிழந்து மிகவும் கவலைக்கிடமான முறையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசுவிற்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.