இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை நந்திதா. அதையடுத்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என சில ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட்டை பிடித்தார். மேலும், கவர்ச்சிகரமான வேடங்கள் வந்தபோது எனது உடல் அமைப்புக்கு செட்டாகாது என்று தவிர்த்து வந்த நந்திதா, ராதாமோகன் இயக்கிய உப்புக்கருவாடு படத்தில் ஒரு பாடல் காட்சியில் கிளாமராக நடித்து வெள்ளோட்டம் பார்த்தார்.
இந்த நிலையில், தற்போது அரவிந்த்சாமி நடித்து வரும் வணங்காமுடி படத்தில் ஒரு பாடல் காட்சியில் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடனமாடியுள்ளார். பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட அந்த பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்து நடனமாடியுள்ளார் நந்திதா. தனக்கு கிளாமர் செட்டாகாது என்று நந்திதா கூறி வந்தபோதும், இந்த படத்தில் அவர் கிளாமர் அழகாக படமாக்கப்பட்டுள்ளதாம். வணங்காமுடி படத்தை செல்வா இயக்குகிறார். அரவிந்த்சாமி, ரித்திகா சிங், சிம்ரன் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர்.