ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு திருமண வதந்தியில் பிரபாஸ் - அனுஷ்கா இருவருமே சிக்கினர். அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை இருவருமே மறுத்தனர்.
தற்போது சாஹோ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் பிரபாஸ். ஆனால், பல மாதங்களாக டயட்ஸ், யோகா கடைபிடித்து தனது உடல் எடையை ஸ்லிம் பண்ணி விட்ட அனுஷ்கா தான் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. பாகுபலி-2வில் நடித்து வந்தபோது அவர் நடித்து வந்த பாக்மதி படம் தான் இப்போதும் தயாராகி வருகிறது. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகயிருப்பதாக சொல்கிறார்கள்.
இந்நிலையில் எந்த படத்திலும் ஒப்பந்தமாகாத அனுஷ்கா, திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக டோலிவுட் சினிமா வட்டாரங்களில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. பிரபாஸை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக செய்தி வெளியானபோது உடனடியாக மறுப்பு வெளியிட்ட அனுஷ்கா, இப்போது பரவியுள்ள திருமண செய்திகளுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லையாம். அதனால் விரைவில் அனுஷ்காவின் திருமண செய்தி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.