நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
சின்னவீடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாவர் கல்பனா, அதன் பிறகு தலையாட்டி பொம்மைகள், திருமதி ஒரு வெகுதி, சதிலீலாவதி, சிந்து நதி பூ, டும் டும் டும் உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த படம் வைகை எக்ஸ்பிரஸ். அதன் பிறகு இட்லி என்ற படத்தில் நடித்தார் அது இன்னும் வெளிவரவில்லை. அவர் நடித்து முடித்துக் கொடுத்த மற்றொரு படம் காதல் கசக்குதய்யா. இந்தப் படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.
இந்தப் படத்தில் துருவா, வெண்பா, சார்லி, உள்பட பலர் நடித்துள்ளனர். 25 நாளில் இந்தப் படம் தயாராகி உள்ளது. தரண் இசை அமைத்துள்ளார், துவாரக் ராஜா இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
காதல் கசக்குதய்யா, அதன் தலைப்பிற்கேற்ற ஒரு குதூகலமான படம் முழுக்கதையையும் விஷுவல்லாக மட்டும் இல்லாமல் பஞ்ச் என்று சொல்லப்படும் வசனங்களின் வழியாகவே முழுப்படமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். காதலின் பெயரால் பெண்களை திட்டி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், காதலை குறித்து பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும் சித்தரிக்கிறது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது என்றார் துவாரக் ராஜா.