ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர்கள் படத்தில் நடிப்பது என்பது தமிழ் சினிமாவின் முதல் தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமணியம் காலத்திலேயே தொடங்கிவிட்டது. முன்பு எப்போதாவது நடிப்பார்கள். இப்போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எல்லா இயக்குனர்களுமே நடிக்க வந்து விடுகிறார்கள். இதற்கு பாரதிராஜா, பாலச்சந்தர்கூட விதிவிலக்கல்ல.
தற்போது 6 இயக்குனர்கள் முக்கிய கேரக்டரில் நடிக்க கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா... என்ற படம் தயாராகி வருகிறது. வடிவேலுவின் காமெடி டயலாக்கையே தலைப்பாக கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், ராஜ்கபூர், மன்சூரலிகான், அனுமோகன் என 6 இயக்குனர்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ஸ்வாதி, அஸ்மிதா, ரித்திஷ் விஷ்வா, ராஜ், திவ்யா என்ற புதுமுகங்களும் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த தேவா இசை அமைக்கிறார், ராஜாக் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களுக்கு, அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று வருகிறது. இதை முடிக்க நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். இந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்கள் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இதிலிருந்து நான்கு முதியவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், பவர்ஸ்டார் சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து உருவாகி இருக்கிறது. பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது என்கிறார் இயக்குன் ராஜாக்.