ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி நாயகன் பிரபாஸ் அடுத்தபடியாக சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார். இந்த படத்தில் பிரபாசுடன் மோதும் வில்லனாக ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், நாயகியாக யாரை நடிக்க வைப்பது என்கிற பரிசீலனை பல மாதங்களாக நடந்து வந்தது.
இந்நிலையில், சாஹோ படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 19ந்தேதி முதல் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்காக ரூ.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போட்டுள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த சாஹோ படம் அடுத்து ஆண்டு திரைக்கு வருகிறது.