இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. தள்ளாத வயதிலும் தனிமனிதரான அரசை எதிர்த்தும், மக்களுக்காகவும் போராடி வருகிறார். இவரின் கேரக்டர் வெவ்வேறு பெயர்களில் சில படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும் முழுமையாக டிராபிக் ராமசாமியின் கதை படமாக இருக்கிறது. இதனை விஜய் விக்ரம் என்ற புதுமுகம் இயக்குகிறார். டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்.
இந்த நிலையில் நேற்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை, அவரது அலுவலத்தில் சந்தித்தார் டிராபிக் ராமசாமி. அவருக்கு பொன்னாடை போர்த்தி, அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். இயக்குனர் விஜய்விக்ரம் எழுதியிருக்கும் தன்னுடைய வாழ்க்கை ஸ்கிரிப்டையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், மேனரிசங்கள் என்ன என்பதை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விளக்கி கூறினார். தன் கதை படமாவது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், படத்துக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்வதாகவும் கூறி வாழ்த்திவிட்டு