ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் "விவேகம்". சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்துள்ளார். இம்மாதம் 24-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது விவேகம்.
அஜித் சம்பளம், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம், தயாரிப்பு செலவு, அது இது என்று... மொத்தம் விவேகம் படத்தின் பட்ஜெட் சுமார் சுமார் 80 கோடி என்கின்றனர் படத்துறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் பட்ஜெட்டை விட விவேகம் படத்தின் பிசினஸ் சிறப்பாக இருக்கிறதாம். விவேகம் படத்தின் மொத்த பிசினஸ் எவ்வளவு?
தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் சுமார் 55 கோடி. எப்.எம்.எஸ். என்கிற வெளிநாட்டு உரிமை - 10 கோடி, தெலுங்கு ரைட்ஸ் - 4 கோடி. சாட்டிலைட் ரைட்ஸ் - 23 கோடி என இதுவரை 110 கோடிக்கு மேல் விவேகம் படத்தை வியாபாரம் செய்துள்ளதாம். ஆக படம் ரிலீஸ்க்கு முன்பே ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துவிட்டது என கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.