Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வியக்க வைக்கும் 'டிக் டிக் டிக்' டீசர்

15 ஆக, 2017 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Tik-Tik-Tik-Teaser-:-Awesome

'நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன்' படங்களுக்குப் பிறகு இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வரும் படம் 'டிக் டிக் டிக்'. இப்படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அசிஸ், ஆரவ் ரவி, ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷ்ன் திரைப்படம். தமிழில் முதன் முறையாக விண்வெளி சம்பந்தப்பட்ட கதையாக இப்படம் தயாராகி வருகிறது. ஹிதேஷ் ஜபக் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. டீசரைப் பார்க்கும் போதே ஒரு வியப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா என ஆச்சரியப்படுத்தியது. விண்வெளி சம்பந்தப்பட்ட கதை என்றால் அதன் உருவாக்கம் ஹாலிவுட் படங்கள் அளவிற்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் ரசிகர்கள் கிண்டலடித்துவிடுவார்கள். ஆனால், டீசரிலேயே படத்தை ஹாலிவுட் படம் அளவிற்கு எடுத்திருக்கிறோம் என நம்ப வைக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்துமே தமிழ் சினிமாவிற்கு புதிதாகத் தெரிகின்றன. தமிழிலும் இப்படி வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போதே பெருமையாக இருக்கிறது.

'டிக் டிக் டிக்' டீசரைப் பார்த்தே திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். நேற்று மாலை யு டியூபில் வெளியான டீசருக்கு இதுவரை 12 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. டீசர் போலவே படமும் வியப்பூட்டும் விதத்தில் இருந்தால் தமிழ் சினிமாவில் இந்தப் படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதை இப்போதே சொல்லிவிடலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in