வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இண்டோ சினி அப்ரிசேஷன் மற்றும் கொரியன் கலாச்சார மையம் இணைந்து சென்னையில் கொரியன் திரைப்பட விழாவை நடத்துகிறது. நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 19ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதில் போயட்ரி, தி ஹோஸ்ட், வூச்சி, ஹாஹாஹா, தி ஹவுஸ் மெய்ட், மை டியர் டெஸ்பரடோ, உள்ளிட்ட பிரபலமான, பல விருதுகளை பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது.
சென்னை ரஷியன் கலாச்சார மையத்தில் நேற்று நடந்த துவக்க விழாவில் கலந்து கொண்டு இந்தியாவுக்கான கொரியன் தூதர் ஹியாங் டே கிம் துவக்கி வைத்தார். நடிகை சமீரா குத்துவிளக்கேற்றி வைத்தார். வருமானவரித்துறை முதன்மை கமிஷனர் ரஜிப் குமார் ஹோட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன்கண்ணன், செயலாளர் தங்கராஜ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.