ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்து வரும் படம் ஜெய் லவகுசா. இந்த படத்திற்காக ஹீரோ, வில்லன், காமெடியன் என மூன்று மாறுபட்ட கோணங்களில் நடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தின் போஸ்டர், டீசர்கள் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் பெரிய அளவில் டிரன்டிங் செய்தனர். அதோடு இந்த படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் ஜெய் லவகுசா படத்தை செப்டம்பர் 21-ந்தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூனியர் என்டிஆர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருவதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடையாமல் நாட்கள் நீட்டிக்கப்பட்டதாம். அதனால் ஜெய்லவகுசா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகும் என்று கூறப்படுகிறது. அதாவது செப்டம்பர் 26-ந்தேதி அல்லது அதற்கும் மேலும் ஆகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.