ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'விவேகம், மெர்சல்' படங்கள் வெளிவந்து தியேட்டர்களில் ஓடி முடிக்கும் வரை சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் நிற்கவே நிற்காது. அதற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுப்பார்கள், மீண்டும் அடுத்த படங்களின் அறிவிப்பு வரும் போது ஆரம்பித்து விடுவார்கள்.
தினமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை எங்கிருந்தோ தேடிப் பிடித்து எடுத்து வந்து சண்டையிட்டுக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடலான 'ஆளப் போறான் தமிழன்' பாடல் அனைவரது வரவேற்பையும் பெற்று யு டியூபில் சாதித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி கொடுக்க அஜித் ரசிகர்கள், 'விவேகம்' டீசர் 1 கோடியே 90 லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது என டிவிட்டரில் டிரென்டிங் செய்ய ஆரம்பித்தார்கள்.
அதைப் பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா ?. 'பைரவா' ஹிந்தி படம் யு டியுபில் 1 கோடியே 80 லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது என அவர்களும் டிரென்டிங்கில் விட்டனர். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் 'விவேகம்' டீசர் மே மாதம் 11ம் தேதி யு டியூபில் வெளியானது. 19 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் பெற மூன்று மாத காலம் ஆகியிருக்கிறது. ஆனால், 'பைரவா' ஹிந்தி படம் யு டியூபில் ஜுலை 29ம் தேதிதான் வெளியானது. 18 மில்லியன் பார்வைகளை இந்தப் படம் 14 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது.
விஜய் நடித்து வெளிவந்த 'தெறி' படத்தின் ஹிந்தி டப்பிங் யு டியூபில் ஏற்கெனவே 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதே சமயம் அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்தின் ஹிந்தி டப்பிங் யு டியூபில் 14 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. அப்படியென்றால் விஜய்யை ஹிந்தி ரசிகர்களும் அதிகம் ரசிக்கிறார்களோ...?