தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படம் அருவி. கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். ஷெல்லி கலிஸிட் ஒளிப்பதிவு செய்கிறார், பிந்து மேனன், வேதாந்த் பரத்வாஜ் இசை அமைக்கிறார்கள். அருவி என்கிற ஒரு பெண்ணின் வாழ்க்கை கதைதான் படம்.
ஹீரோயினை மையமாக கொண்ட இந்தப் படத்தில் நடிக்க ஆடிசன் வைத்து ஹீரோயினை தேர்வு செய்திருக்கிறார்கள், ஆடிசனில் கலந்து கொண்ட 500 பெண்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அதிதி பாலன். இதுகுறித்து படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் கூறியதாவது:
உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் சொசியோ - பொலிடிகல் படமாக இது தயாராக உள்ளது. கதாநாயகி தேர்வு மட்டும் 8 மாதம் நடந்தது. தேர்வில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோரிலிருந்து தேர்வுசெய்யப்பட்டவர் தான் நாயகி அதிதி பாலன். இப்படத்தில் அதிதி பாலன் “அருவி“ என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். அருவி எனும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்பு தான் இப்படத்தின் கதைக்களம்.
ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் இப்படம் அருவி என்ற பெண்ணின் பையோகிராபி போல் இருக்கும். இன்னொரு கோணத்தில் இப்படம் அருவி சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், அவள் கடந்து செல்லும் பாதையில் நிகழும் பிரச்சனை, அவள் சந்திக்கும் மனிதர்கள் என சமூகம் சார்ந்து பேசும் ஒரு கதையாக இருக்கும். முகமது அலி பாய்க் என்ற ஐதராபாதை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட், அஞ்சலி வரதன் என்ற திருநங்கை, லட்சுமி கோபால் சாமி என்ற கன்னட நடிகை, மதன் என 20க்கும் மேற்பட்டர்வர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல், மும்பை இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல், நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் கேரளா, தி ஹபிடேட் பிலிம் பெஸ்டிவல் டெல்லி, தி பயோஸ்கோப் குளோபல் பிலிம் பெஸ்டிவல் பஞ்சாப் என பல்வேறு பிலிம் பெஸ்டிவல்களில் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்றார் இயக்குனர்.