ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடற்கரை காமராஜர் சாலையில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி சிலை அகற்றப்பட்டு அடையாறில் கட்டப்பட்டு வரும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிவாஜி சிலையை கடற்கரையில் மீண்டும் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெப்சி அமைப்பும், இயக்குனர்கள் சங்கமும் இதனை வலியுறுத்தியது. இந்த நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சிவாஜி கணேசன் சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க அரசு தீர்மானித்த வேளையில் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சங்கத்தின் தலைவர் நாசர் சந்தித்து சிலையை காமராஜர் சிலை அருகே வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் கடற்கரை சாலையில் இருந்து சிலை அகற்றப்பட்டு மணிமண்டப வளாகத்தில் தமிழக அரசு வைத்துள்ளது .
இது பற்றி நடிகர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ சிவாஜி கணேசனின் திருஉருவ சிலையை நிறுவ வேண்டும் என்கிற வேண்டுகோளை தீர்மானமாக நிறைவேற்றபட்டது.
இந்த தீர்மானத்தை தமிழக அரசிடம் வேண்டுகோளாக வைத்து கடிதம் கொடுப்பதென நடிகர் சங்கம் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சிலைக்காக சமூக அமைப்புகளும், திரைத்துறையை சார்ந்த பெப்சி, இயக்குனர் சங்கம் அனைத்தும் குரல் கொடுத்திருப்பதற்க்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.