தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான நிகிஷா பட்டேல், சினிமாவில் நடிக்கும் ஆசையில் இந்தியா வந்தார். பலவித முயற்சிகளுக்கு பிறகு தெலுங்கு புலி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு நரசிம்மா என்ற கன்னட படத்தில் நடித்து புகழ்பெற்றார். தமிழில் என்னமோ ஏதோ படத்தின் மூலம் அறிமுமானார். சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் நடித்த தலைவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு கரையோரம், நாரதன், 7 நாட்கள் படத்தில் நடித்தார்.
நிகிஷா எவ்வளவு கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. நடித்த படங்கள் அனைத்திலுமே கவர்ச்சியாகத்தான் நடித்தார். தற்போது தனியாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை சினிமா பீல்டில் உலாவ விட்டுள்ளார். நிகிஷாவின் படு கவர்ச்சியான அரை நிர்வாண படங்களை கண்டு மிரண்டுபோயிருக்கிறது கோடம்பாக்கம்