Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரீ-என்ட்ரி ஆகும் தேசிய விருது நடிகர்

14 ஆக, 2017 - 11:41 IST
எழுத்தின் அளவு:
National-award-winner-GM-Sundar-backs-to-cinema

2003ம் ஆண்டு உருமாற்றம் என்ற குறும்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் ஜி.எம்.சுந்தர். லெனின் இயக்கி தேசிய விருது பெற்ற ஊருக்கு 100 பேர் படத்தின் ஹீரோவும் இவர்தான். சமீபத்தில் வெளியான பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் ஊர் தலைவர் கேரக்டரில் நடித்து ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார் சுந்தர். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நடிப்பு மீதுள்ள ஆசையினால் பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நடிப்பு கற்றேன். அதன்பிறகு பாலச்சந்தர் முன் நடித்து காட்டி அவரது அன்பை பெற்றேன். புன்னகை மன்னன் படத்தில் எங்கள் பெருமைமிகு அறிமுகம் என்ற டைட்டிலோடு அந்தப் படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சத்யா, அதர்மம், தொட்டி ஜெயா உள்பட 50க்கும் மேற்றபட்ட படங்களில் நடித்தேன். அதன்பிறகு தொழில் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது இருந்ததால் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதலும் கடந்து போகும் படத்தில் நலன் குமாரசாமி ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் பெரிய கேரக்டரில் நடித்துள்ளேன். தொடர்ந்து நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். என்கிறார் ஜி.எம்.சுந்தர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in