Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல்வாதியாக மாறிய 'பிக் பாஸ்'

13 ஆக, 2017 - 16:20 IST
எழுத்தின் அளவு:
Fans-upset-with-Bigboss

வாக்களித்த வாக்காளர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் போல, கடந்த ஒரு வாரத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக வாக்களித்த ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் 'பிக் பாஸ்'. கடந்த திங்கள் கிழமையன்று இந்த வாரத்திற்கான எவிக்ஷனுக்காக ரைசா தவிர மற்ற அனைவரும் தேர்வானார்கள். அடுத்து வையாபுரி, சினேகன் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரைக் காப்பாற்றலாம் என போட்டியாளர்களிடம் பிக் பாஸ் சொன்னதில் மற்றவர்கள் சேர்ந்து வையாபுரியைக் காப்பாற்றினார்கள். அதற்குப் பிறகு நாமினேஷனில் பிந்து மாதவி, கணேஷ், சினேகன், சக்தி, ஆரவ், காயத்ரி உள்ளிட்ட 6 பேர் இருந்தார்கள்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென போட்டியாளர்களிடம் ஐந்து கேள்விகள் கேட்டதில் சரியான பதில்களைச் சொன்னதாக காயத்ரியைக் காப்பாற்றினார் பிக் பாஸ். அதனால், காயத்ரியை இந்த வாரம் வெளியேற்ற வாக்களித்த பலரும் கோபமடைந்து சமூக வலைத்தளங்களில் பிக் பாஸின் இந்த திடீர் காயத்ரி பாசத்திற்கு அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தார்கள்.


நேற்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசனின் முன்னாள் கதாநாயகி ஸ்ரீப்ரியா, காமெடி நடிகர் சதீஷ் இருவரும் கலந்து கொண்டு சில கேள்விகளை, சந்தேகங்களைக் கேட்டனர். அப்போது காயத்ரி காப்பாற்றப்பட்டதை கண்டித்து ஸ்ரீப்ரியா கேள்வி கேட்டார். அதை முன்னரே சொல்லியிருக்க வேண்டும் என்றார். அவரின் கேள்விக்கு பதிலளித்த 'பிக் பாஸ்', இது 'இன்டர்நேஷனல் ஃபார்மேட்', யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காப்பாற்றப்படுவார்கள், எலிமினேட் ஆனவர்களும் மீண்டும் உள்ளே வரலாம், புதிதாக யார் வேண்டுமானாலும் உள்ளே போகலாம் என்று சொன்னார்.


ஆனால், பிக் பாஸின் இந்த பதில் ரசிகர்களுக்குத் திருப்தியளிப்பதாக இல்லை. இந்த வாரம் காயத்ரி, சக்தி இருவரில் ஒருவர்தான் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறுவார்கள் என்று நினைத்திருந்த நிலையில் காயத்ரியை வேண்டுமென்றே நிகழ்ச்சியில் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.


Advertisement
நாளை 'வேலைக்காரன்' டீசர் வெளியீடுநாளை 'வேலைக்காரன்' டீசர் வெளியீடு ஆளப்போறான் தமிழன் : கூகுளில் முதலிடம் பிடித்த மெர்சல் ஆளப்போறான் தமிழன் : கூகுளில் ...


வாசகர் கருத்து (6)

elangovan - tamilnadu,இந்தியா
14 ஆக, 2017 - 11:05 Report Abuse
elangovan மக்கள் பிடித்தவர்களுக்கு மட்டுமே வோட்டை போடுகிறார்கள் . காயத்ரி போல் நிறைய பேர் எல்லா இடத்திலும் உண்டு.ஆனாலும் அவர்கள் கெட்டவர்கள் இல்லை.அங்கே நடிப்பவர்களை மட்டுமே மக்களுக்கு பிடிக்கிறது.மக்கள்தான் முடிவுதான் அங்கே இருக்க தகுதி என்றால் அங்கே கண்டெஸ்டன்ட்டாக யாரும் போகவேண்டாம்.
Rate this:
baski -  ( Posted via: Dinamalar Android App )
14 ஆக, 2017 - 08:54 Report Abuse
baski its a well planned and d by Vijay tv for nasty buisness
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
14 ஆக, 2017 - 06:45 Report Abuse
Kalaiselvan Periasamy நிகழ்ச்சியை பாருங்கள். எந்த போட்டியாளருக்கும் ஓட்டு போடாதீர்கள். ஏனென்றால் இது ஒருவகையான விளையாட்டு. மேலும் இது ஒரு சினிமா போன்று உருவாக்கப்படுத்தப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் தான் வெற்றியடைய தன்னால் ஆனா யுக்தியை பயன் படுத்துகின்றனர். அவ்வளவே. மக்களே மக்களாக இருங்கள் மாக்களாக மாறி விடாதீர்கள்.
Rate this:
LAXMAN - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
14 ஆக, 2017 - 00:25 Report Abuse
LAXMAN dont waste your time for this programe
Rate this:
shanan -  ( Posted via: Dinamalar Android App )
13 ஆக, 2017 - 16:58 Report Abuse
shanan fraud programme dont vote for bigboss and dont waste your SMS money
Rate this:
14 ஆக, 2017 - 06:05Report Abuse
sholvalkamal cannot behave like this....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kodiveeran
  • கொடிவீரன்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : மகிமா ,சனுஷா
  • இயக்குனர் :முத்தையா
  Tamil New Film Pakka
  • பக்கா
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
  • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
  Tamil New Film Nimir
  • நிமிர்
  • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
  • நடிகை : பார்வதி நாயர்
  • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
  Tamil New Film Aval
  • அவள்
  • நடிகர் : சித்தார்த்
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :மிலிந்த்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in