இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டைரக்டர் ரோஹித் ஷெட்டி, ராம் லகான் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷெட்டி இத்தகவலை உறுதி செய்தார். மேலும் இந்த படத்தை ரீமேக் செய்ய முடியாமல் படம் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், இப்படத்தை நான் இயக்க உள்ளது உண்மை தான். ஆனால், பிரச்னை உள்ளதால் ராம் லகான் படம் தற்போது கிடப்பில் உள்ளது. இரண்டு பெரிய நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்க விரும்பவில்லை. அவர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் படங்களை புரோமோட் செய்யவே விரும்புகிறார்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பதில் என்ன பிரச்னை என எனக்கு தெரியவில்லை. அதனால் அப்படத்தின் வேலைகள் தற்போது நடக்கவில்லை என்றார்.
நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் அர்ஜூன் கபூரை இந்த ரீமேக் படத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.