மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
பொதுவாக தமிழ் உட்பட மற்ற மொழிப்படங்கள் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வு.. இந்த விஷயத்தில் சமீப வருடங்களில் சமுத்திரக்கனியின் படங்கள் மட்டுமே அந்த சாதனையை செய்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்' படத்தை தொடர்ந்து, அவரது 'அப்பா' படமும் இப்போது மலையாளத்தில் 'ஆகாச மிட்டாய்' என்கிற பெயரில் ரீமேக்காகி வருகிறது..
ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரக்கனியே இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.. அதில் மோகன்லால் வாய்ஸ் ஒலித்தது கண்டு பலருக்கும் ஆச்சர்யம். அதை உறுதிப்படுத்தும் விதமாக இதற்கு குரல் கொடுத்ததற்காக மோகன்லாலுக்கு நன்றி தெரிவித்து ஜெயராம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன், அதாவது சமுத்திரக்கனியின் 'அப்பா' படம் தமிழில் ரிலீஸாவதற்கு முன்பும் கூட, மோகன்லால் அந்தப்படத்தின் புரமோஷன் வீடியோவுக்காக தனது தந்தையை பற்றி பேசி சமுத்திரக்கனிக்கு பப்ளிசிட்டியில் கைகொடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான 'ஒப்பம்' படத்தில் நடித்ததன் மூலம் மோகன்லால்-சமுத்திரக்கனியின் நட்பு இன்னும் பலமாகி இருப்பது, இப்போது சமுத்திரக்கனியின் படத்திற்கு மோகன்லால் வாய்ஸ் கொடுத்துள்ளதன் மூலம் நன்றாகவே தெரிகிறது.