டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மயிலிறகில் ஒன்று கை, கால் முளைத்து வந்ததோ... இலைச் சருகில் ஒன்று தேகம் செதுக்கி நின்றதோ... குடை காளான்கள் இரண்டு இமைகளாய் ஒட்டிக் கொண்டதோ, இவள் விழி ஈர்ப்பு விசையில் புவி ஈர்ப்பு விசைகளும் தோற்றுப் போனதோ... இடைவெளியில் மெல்லிய அருவி இடையாகி ஓடியதோ... என, கவிதை சொல்லத் துாண்டும் ஒல்லி பெல்லி நடிகை சஞ்சனா சிங் பளிச்சென பேசுகிறார்...
முதல் முகவரி ?
தமிழ் சினிமாவில் ரேனிகுண்டா படம் தான் என் முதல் முகவரி. இளம் பெண்ணை வில்லனிடம் இருந்து காப்பாற்றும் கேரக்டர். இதுக்காக 22 பொண்ணுங்களை ஆடிஷன் பண்ணினாங்க, பொருத்தமா இல்லை, கடைசியா இயக்குனர் பன்னீர்செல்வம் என்னை செலக்ட் செய்தார். இன்னிக்கும் என் கேரக்டரை ரசிகர்கள் பாராட்டுறாங்க.
உங்கள் நடிப்பில்...
வெற்றிச் செல்வம், இரண்டாவது படம், ரகளைபுரம், அஞ்சான், மீகாமன், கோ... இப்போ சந்தானம் நடிக்கும் சக்கை போடு போடு ராஜாவில் விவேக்கிற்கு ஜோடியா நடிக்கிறேன், சேலை கட்டிய கிளாமர் கேரக்டர்... அடுத்து பா.விஜய், பாக்யராஜ் நடிக்கும் படம் ஒன்றில் நடிக்கிறேன்.
சினிமா, மாடலிங் ?
சினிமாவில் நிறைய வெரைட்டி கேரக்டர்கள் கிடைக்கும், வாழ்நாள் முழுக்க ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கலாம். மாடலிங் ஒரு நாள் தான் வேல்யூ, ஷோ முடிந்ததும் அவ்வளவு தான்.
நிஜ வாழ்வில் நடிப்பு ?
அப்படி எல்லாம் நடிச்சது இல்லை, நடிக்கும் பழக்கமும் இல்லை. அப்படியே நான் நடிச்சாலும் இது நடிப்புதான்னு தெரிஞ்சுடும்.
ரியாலிட்டி ஷோ ?
ஒரு நடிகைக்கு ரியாலிட்டி ஷோ அவசியம் தான். அப்போ தான் நடிப்பு தவிர, பிற திறமைகள் வெளியே தெரியும். நான் என் ரசிகர்களுக்காக நிறைய ஷோ பண்றேன்.
பிக் பாஸ் அழைப்பு வந்தால் ?
எனக்கு எதையுமே ஆரம்பத்தில் இருந்து செஞ்சாத் தான் பிடிக்கும். இந்த கேப்புல போறதெல்லாம் பிடிக்காது, போனாலும் ஜெயிக்க முடியாது. பிக் பாஸ்ல கணேஷ் வெங்கட்ராம்க்கு தான் என் ஓட்டு.
கல்யாணக் கனவுகள்...
இன்னும் 3 ஆண்டுகள் நடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கணும். சினிமாவுல நிறைய கஷ்டப்பட்டாச்சு. கொஞ்சம் பிரேக் கொடுக்கணும்.
அரசியல்...
அரசியல் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிறைய குரல் கொடுத்திருக்கேன், சமூக சேவையில் ஈடுபடும் திட்டமும் இருக்கு.
சஞ்சனா கிளாமர் பெண்ணா?
ஆமா, ஆரம்பத்தில் சில இயக்குனர்கள், நான் ஹோம்லி மட்டும் தான் பண்ணுவேன்னு நினைச்சிருந்தாங்க. ஆனால், கிளாமரும் எனக்கு பிடிக்கும், பண்ணுவேன்.
லவ் பண்றீங்களா ?
சினிமாவில் பிஸியா இருக்கும் போது, லவ் பண்ணினா நடிப்பில் கவனம் செலுத்த முடியாது. ஆனால், அரேன்ஞ்டு லவ் மேரேஜ் தான் பண்ணிக்குவேன்.